New Updates! Fresh news just arrived.

தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

News

தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!

January 17, 2026 10:43 am
தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது!
மதவாச்சி, கடவத்தகம பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று (16) இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் இரு பிள்ளைகளினுடைய தந்தையொருவர் உயிரிழந்தார்.

மூத்த மகன் நடத்திய தாக்குதலினாலேயே குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனது தந்தை தலையில் காயங்களோடு வீட்டின் முற்றத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் கிடப்பதினை, அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் இளைய மகன் கண்டுள்ளார்.

உயிரிழந்தவர் மூத்த மகனோடு மது அருந்தியுள்ளதாகவும், ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டைத் துண்டினால் தாக்கி இந்தக் கொலையினை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 67 வயதுடைய கடவத்தகம, மதவாச்சி பிரதேசத்தினை சேர்ந்தவராவார்.

42 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சம்பவம் குறித்து மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளினை மேற்கொண்டு வருகின்றனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now