New Updates! Fresh news just arrived.

மனைவியின் தந்தை மீது மருமகன் வாள் வெட்டுதாக்குதல்: வைத்தி...

News

மனைவியின் தந்தை மீது மருமகன் வாள் வெட்டுதாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!

March 11, 2026 10:08 pm
மனைவியின் தந்தை மீது மருமகன் வாள் வெட்டுதாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கிராம கோடு சந்தி பகுதியில் மாமன் மீது மருமகன் மேற்கொண்ட வாள் வெட்டு தாக்குதலில் மாமன் பாதுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சமபவம் இன்று பிற்பகல் 3:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது

மனைவியின் தந்தைக்கும் மருமகனுக்கும் நீண்ட நாள் முரண்பாடு ஏற்பட்டுகொண்டிருந்த நிலையில் மாமனார் வீட்டிலிருந்து வெக்கியேறி கிராமகோடு சந்தி பகுதியில் வானிப நிலையம் ஒன்றில் பொருள் கொள்வனவிற்குகாக நிண்டு கொண்டிருந்தவேளை மருமகனால் சரமாரியாக கை, கழுத்து தலை முதுகு பகுதிகளில் வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு மருமகன் தப்பி சென்றுள்ளார்

இந்நிலையில் அருகில் நின்றவர்களால் வாழ் வெட்டு சம்பவத்தில் படுக்கைமடைந்த முதியவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிக்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இச் சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாளால் வெட்டியவர் வடமராட்சி தெற்கு பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிட தக்கது
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now