தென்கிழக்கு பல்கலை வீதி அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கற்ற ...
News
தென்கிழக்கு பல்கலை வீதி அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கற்ற முறையில் முன்னெடுப்பு!
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு முன்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடபாதை அபிவிருத்திப் பணிகள் தூரநோக்கு அற்ற வகையிலும், முறையற்ற விதத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள ரத்நாயக்கவை நேரடியாக குறித்த இடத்திற்கு அழைத்துச் சென்று, அப்பணிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் குறித்து தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினரிடம் விளக்கமளித்ததுடன் நேரில் சுட்டிக்காட்டினார்.
முறையற்ற அபிவிருத்திப் பணிகளால் பொதுமக்களும் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் நிலை உருவாகியுள்ளது!
பிரதேச சபை பிரதிநிதிகள் நேரில் கள ஆய்வு
இப்பரிசீலனையின் போது சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை அமைப்பாளருமான வை.வீ.எம். நபாஸ் உடனிருந்து அபிவிருத்திப் பணிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்.
முறையற்ற விதத்தில் முன்னெடுக்கப்படும் இந்த நடபாதை அமைக்கும் பணிகளால் பல்கலைக்கழக மாணவர்கள், வாகனச் செலுத்துநர்கள் மற்றும் பொதுமக்கள் சந்திக்கும் நடைமுறைச் சிரமங்கள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
பாறுக் ஷிஹான்