உள்ளூராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக...
News
உள்ளூராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில் தென்கிழக்கு பல்கலைக்கழகக் குழு சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம்!
உள்ளூராட்சி சேவைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் நோக்கில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.ஜூனைடீன் ஆகியோருக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தைச் சேர்ந்த குழுவினர் சம்மாந்துறை பிரதேச சபைக்கு கள விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கலாநிதி முனீப் எம்.முஸ்தபா, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஐ.எம்.கலித் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கள விஜயத்தின் போது, தெரு மின் விளக்கு முகாமைத்துவம் மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவம் போன்ற சேவைகளை நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக எவ்வாறு மேலும் மேம்படுத்தலாம் என்பது தொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களுடன் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று பார்வையிட்டனர்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம்.காலித், எம்.ஆர்.ஆஷிக் முஹம்மட், எம்.ஜ.எம்.றிஸ்விக்கான் ஏ.சீ.எம்.நயீம் ஆகியோருடன் சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம்.முஸ்தபா, ரீ.ஸங்கீதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்