New Updates! Fresh news just arrived.

சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் கைது! - G...

News

சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் கைது!

October 28, 2026 9:34 am
சொய்சாபுர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இருவர் கைது!
கல்கிஸ்ஸ, சொய்சாபுர பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவரைச் சுட்டுக்கொன்று பெண் ஒருவருக்குக் கடுமையான காயங்களை ஏற்படுத்திய சம்பவத்துக்கு உடந்தையாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு வலய குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதற்கமைய, குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (27) கல்கிஸ்ஸ மற்றும் கஹத்துடுவ பொலிஸ் பிரிவுகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 28 மற்றும் 36 வயதுடைய கஹத்துடுவ மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு வலய குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now