New Updates! Fresh news just arrived.

பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி

News

பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி

July 11, 2026 10:20 am
பெல்ஜியத்தை வீழ்த்திய ஸ்பெயின் அரையிறுதிக்கு தகுதி
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின் அணிக்கு 30-வது நிமிடத்தில் பாபியன் ரூயிஸ் கோல் அடித்து முன்னிலையை பெற்றுக் கொடுத்தார்.

இதற்கு பதிலடி கொடுக்க பெல்ஜியம் அணியின் சார்ல்ஸ் டி கெட்லேரே, 41-வது நிமிடத்தில் தலையால் ஒரு கோல் அடித்தார்.

இதனால், 1-1 என்ற சமநிலைக்கு வந்தது.

போட்டியின் 2-வது பாதியில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக விளையாடின.

ஆட்டத்திற்கு மேலதிக நேரம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 88-வது நிமிடத்தில் மாற்று வீரராக களமிறங்கிய மிகேல் மெரினோ வெற்றிக்கான கோலை பதிவு செய்தார்.

இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் அணி அரையிறுதியில் பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now