விசேட நடவடிக்கை: 28,566 பேரிடம் சோதனை: 686 பேர் கைது! - G...
News
விசேட நடவடிக்கை: 28,566 பேரிடம் சோதனை: 686 பேர் கைது!
பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களின் பேரில் இலங்கை பொலிஸாரினால் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட விசேட குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் கீழ் கடந்த சனிக்கிழமை (13) திகதி 28,566 பேரிடம்பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், 18 நபர்கள் பல்வேறு குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்கள் ஆவர். மேலும், இந்த சிறப்பு நடவடிக்கைகளின் போது 304 பிடியாணைதாரர்களும், நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்ட 142 திறந்த பிடியாணைதாரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 60 பேரும், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக 171 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
அத்தோடு, சாலை விபத்துக்களைக் குறைக்கவும், போக்குவரத்து ஒழுக்கத்தைப் பேணவும் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து நடவடிக்கைகளின் போது, 60 குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களும், 171 கவனக்குறைவாக வாகனம் ஓட்டுபவர்களும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4,507 பிற போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திகனைக்கலாம் தெரிவித்துள்ளது.