வியட்நாம் ஜனாதிபதி இந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று விசேட...
News
வியட்நாம் ஜனாதிபதி இந்நாட்டு பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை!
சோசலிச வியட்நாம் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் இன்று (08) இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
இன்று முற்பகல் 11.05 மணிக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதியை, சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோர் வரவேற்பார்கள்.
இதனைத் தொடர்ந்து, வியட்நாம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் குறுகிய சந்திப்பொன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை - வியட்நாம் நட்பு சங்கத்தின் தலைவரான அமைச்சர் தம்மிக படபெந்தி மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொள்வர்.
இங்கு வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்ற அதிதிகள் புத்தகத்தில் விசேட நினைவுச் குறிப்பையும் இடவுள்ளார்.
அதன் பின்னர், சபை மண்டபத்திற்குள் நுழையவுள்ள வியட்நாம் ஜனாதிபதி, சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள விசேட ஆசனத்தில் அமர்ந்து, முற்பகல் 11.40 மணிக்கு பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
2015ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகத் தலைவரொருவர் இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இதுவென பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் தமது உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பின்னர், ஜனாதிபதி பாராளுமன்ற வளாகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வார் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.