எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு!
News

எதிர்கால வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களமானது விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.
நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலையானது மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இம்மாதம் 8 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமையானது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.