கடவுச்சீட்டுகளைப் பெற பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வோர...
News
கடவுச்சீட்டுகளைப் பெற பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வோருக்கான விசேட அறிவிப்பு!
ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்கள் நாளை (29) முதல் இணையம் ஊடாக திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்வது கட்டாயமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த சேவைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு இணையத்தினூடாக திகதியையும் நேரத்தினையும் முன்பதிவு செய்ததற்கு பின்னரே பிராந்தியத்தின் அலுவலகங்களுக்கு வருகை தர வேண்டும்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் நுழைந்ததன் பின்னர், 'பிராந்திய அலுவலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்காக திகதியையும் நேரத்தையும் ஒதுக்கிக் கொள்ளுதல்' என்ற இணைப்பு ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தின் சேவைகள் வழமைபோன்று நடைபெறும் என அதன் ஊடகப் பேச்சாளர் மஹேஷ் கருணாதாச தெரிவித்தார்.