New Updates! Fresh news just arrived.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிம...

News

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்!

February 12, 2026 9:50 pm
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்தான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்திருக்கும் இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரினுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்குத் தேவையான வசதிகளினை வழங்குவதினை விரைவுபடுத்துமாறு விடயத்துக்கு தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களினை வழங்கியுள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டிருக்கும் உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களினை நிறுவும் பணிகளினை இன்று (12) நேரில் கண்காணித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர்களால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களினை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களினை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளினை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளினை செயற்படுத்தி, வழக்குக் காரியங்களினை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலக்கம் B/88, கிரகரி வீதி, கொழும்பு 07 மற்றும் இலக்கம் C-76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இலக்கம் B-108, விஜேராம வீதி, கொழும்பு 07 மற்றும் இலக்கம் B-12, ஸ்டேன்மோர் கிரசன்ட் ஆகிய முகவரிகளிலுள்ள 4 வீடுகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now