இந்திய உதவித் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில...
News
இந்திய உதவித் திட்டங்களில் எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
இந்திய அரசின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற கட்டுமானத் திட்டங்களில் எழுந்திருக்கின்ற சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இன்று (27) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமாகிய கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரின் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, இந்தியாவின் உதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டுமானத் திட்டங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கவனஞ்செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், குறித்த திட்டங்களினுடைய ஒப்பந்தங்களைப் புதுப்பித்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் பெருந்தோட்டம், சமூக உட்கட்டமைப்பு, வீடமைப்பு மற்றும் நீர் வழங்கல், மீன்பிடி, நீரியல் மற்றும் கடற்றொழில் வளங்கள் மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய அமைச்சுகளின் கீழ் குறித்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், இதுதவிர, 'டித்வா' சுறாவளி பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட 450 மில்லியன் டொலர் கடன் மற்றும் உதவிகளின் கீழ் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
அத்தோடு, குறித்த திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் தனியான அலகு ஒன்றினை நிறுவுவது தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.