New Updates! Fresh news just arrived.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பி...

News

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

September 24, 2026 7:13 pm
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் மருத்துவ சேவைகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (24) பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்திய கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், சமூக வலுவூட்டல், சமூக பாதுகாப்பு மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எம். பாரூக் உள்ளிட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினர் கலந்துகொண்டனர்.

இதன்போது, வைத்தியசாலையின் தற்போதைய தேவைகள், மருத்துவ சேவைகளின் தரத்தை மேலும் மேம்படுத்துதல், எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள், உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

வைத்தியசாலையின் சேவைத் திறனை மேலும் அதிகரிப்பதற்குத் தேவையான அத்தியாவசிய வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அபிவிருத்திக் குழுவினரால் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.

அத்துடன், முன்மொழியப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மற்றும் சுகாதார அமைச்சின் பங்களிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவினால் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், சுகாதார அமைச்சு உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர்ச்சியான செயற்பாடுகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நீண்டகால அபிவிருத்தி இலக்குகளை அடைந்து, பிராந்திய மக்களுக்கு தரமானதும் மேம்படுத்தப்பட்டதுமான சுகாதார சேவைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து முன்னெடுப்பதன் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now