New Updates! Fresh news just arrived.

மருதமுனை நகர சபை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

News

மருதமுனை நகர சபை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

May 17, 2026 2:25 pm
மருதமுனை நகர சபை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
மருதமுனைக்கு தனியான நகர சபையினை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தினுடைய ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடல், தேசிய காங்கிரஸினுடைய தேசிய தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுள்ளாஹ் அவர்களுடைய முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மருதமுனைக்கான நகர சபையினை சாத்தியப்படுத்துவதற்கான முன் ஆயத்த வேலைத்திட்டங்கள், சட்ட மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நடவடிக்கைகளின் அடுத்த கட்ட செயற்பாடுகளினை ஒருங்கிணைப்பது தொடர்பிலும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இக்கலந்துரையாடலில் மருதமுனை அனைத்து பள்ளிவாசல்கள் அமையத்தினுடைய உறுப்பினர்கள், சமூக முக்கியஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, சாய்ந்தமருது நகரசபை தொடர்பிலான வழக்கில் இடைமனுதாரர்களாக மருதமுனை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆஜராகியிருந்தமையானது குறிப்பிடத்தக்கதாகும்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now