புத்தளம் குடிநீர் திட்ட பிரச்சினை தொடர்பில் பொது நிர்வாக ...
News
புத்தளம் குடிநீர் திட்ட பிரச்சினை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
புத்தளம் மாவட்டத்தின் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்படும் கலா ஓயா மற்றும் மா ஓயா நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்று, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (25) அமைச்சில் நடைபெற்றது.
இதன்போது அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் பாரிய குடிநீர் தட்டுப்பாடு குறித்து விரிவாக அவதானம் செலுத்தப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட திட்டங்களை விரைவாக முன்னெடுத்துச் செல்வதற்குள்ள தடைகளை நீக்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.