நுவரெலியாவில் 1,200 மாணவர்களுக்கு விசேட ஊக்குவிப்பு நிகழ்...
News
நுவரெலியாவில் 1,200 மாணவர்களுக்கு விசேட ஊக்குவிப்பு நிகழ்ச்சி
நுவரெலியாவில் 1,200 மாணவர்களுக்கு போதைப்பொருள் மற்றும் தொழில்நுட்ப அடிமைத்தனத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி நுவரெலியா நகர மண்டபத்தில் இன்று (06) நடைப்பெற்றது.
அந்த நிகழ்வில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் ஆளுமை விருத்திக்காக விசேட வேலைத்திட்டங்களும், ஊக்குவிப்புகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சி கரலிய நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், 1200 மாணவ, மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்றைய சமூகத்தில் சிறுவர்களை அச்சுறுத்தும் மிகப்பெரிய இரண்டு ஆபத்துக்கள் - போதைப்பொருள் பாவனை மற்றும் தொழில்நுட்ப அடிமைத்தனம்.
அதனால் கைத்தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கு அடிமையாகி, கல்வியையும் எதிர்காலத்தையும் தொலைக்கும் சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கு,
- போதைப்பொருளினால் ஏற்படும் ஆபத்துகள்
- தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தும் முறை
- நல்ல நண்பர்களை தெரிவு செய்வது எப்படி
- வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகள்
போன்ற விடயங்கள் குறித்து வளவாளர்களால் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக மாணவர்களை விழிப்படையச் செய்த இந்த முன்னெடுப்பு, நுவரெலியாவில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.