வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து பரீட்சை ...
News
வெளியான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவிப்பு
2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து பரீட்சை ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டதாவது, இம்முறை பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகும். மேலும், அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 11,790 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் மாணவர்கள் அடைந்த சித்தி வீதம் உயர்ந்துள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, விஞ்ஞானப் பாடத்தில் 70.1% மாணவர்களும், கணிதப் பாடத்தில் 72.03% மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
இதேவேளை, இம்முறை பரீட்சையில் 7,419 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2026 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல் 17 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் ஜூலை முதல் வாரத்தில் கோரப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் அறிவித்துள்ளார்.