அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு - கா...
News
அரச அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு - கால அவகாசம் நீடிப்பு
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (Online) மூலம் பதிவேற்ற முடியாமல் போன அரச அதிகாரிகளுக்கு புதிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 7 ஆம் திகதி நள்ளிரவுக்கு முன்னர், எவ்வித அபராதமும் இன்றி குறித்த ஆவணங்களைப் பதிவேற்ற முடியும் என கையூட்டல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப காரணங்களால் இன்று (30) வரை ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாதவர்களின் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், இம்முறை அனைத்துப் பிரகடனங்களும் டிஜிட்டல் முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கையால் பூர்த்தி செய்யப்பட்ட பிரகடனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
அரச அதிகாரிகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.ciaboc.gov.lk ஊடாக தமது மின்னணு பிரகடனங்களைச் சமர்ப்பிக்க முடியும்.
இறுதி நாட்களில் ஒரே நேரத்தில் அதிகமானோர் இணையத்தளத்தைப் பயன்படுத்துவதால் தொழில்நுட்பத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன், நிர்ணயிக்கப்பட்ட திகதிக்குள் சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறுவது பாரிய குற்றமாகக் கருதப்படும் எனவும், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைவாக, ஜூலை 7ஆம் திகதிக்குப் பின்னர் பிரகடனங்களைச் சமர்ப்பிப்பவர்கள் மேலதிக கட்டணத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் மற்றும் அவர்களுக்கு எதிராக ஏனைய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் ஆணைக்குழு தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
எனவே, பொறுப்புள்ள அதிகாரிகளாக இன்றே உங்களது மின்னணு சொத்து பிரகடனத்தை பூர்த்தி செய்யுமாறு இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தியுள்ளது.