சவூதி செல்லவுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
News

சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக, அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை ஜித்தாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக, சவூதி அரேபியாவிற்கு வரும் அத்தோடு அங்கிருந்து திரும்பும் விமான சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, உம்ரா யாத்திரை மேற்கொள்ள எதிர் பார்க்கும் யாத்ரீகர்கள் இது குறித்து அவதானம் செலுத்துமாறு தூதரகம் தனது அறிவித்தலின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதற்கமைய, யாத்திரையில் ஈடுபட எதிர் பார்க்கும் நபர்கள் தமது பயண ஏற்பாடுகளை திட்டமிடும் போது விழிப்புடன் இருக்குமாறும், உரிய உம்ரா குழுப் பிரதிநிதிகள் அல்லது பயண முகவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஏதேனும் அவசர நிலைமை அல்லது எதிர்பாராத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் செயற்படுவதற்கு ஏற்ற மாற்றுப் பயணத் திட்டங்களை கைவசம் வைத்திருப்பதை யாத்ரீகர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.