New Updates! Fresh news just arrived.

ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இ...

News

ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இன்று ஆரம்பம்

July 9, 2026 12:32 pm
ஓய்வூதியதாரர்களுக்கான விசேட இணையவழி விழிப்புணர்வு தொடர் இன்று ஆரம்பம்
ஓய்வுபெறும் அரச அதிகாரிகளுக்கு ஓய்வூதியங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களம் இன்று (09) முதல் விசேட இணையவழி விழிப்புணர்வுத் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

எதிர் வரும் ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள அரச ஊழியர்களுக்கு, தேவையான நடைமுறைகளைச் சரியாகப் பூர்த்தி செய்து, ஓய்வூதியப் பலன்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களை இத்திட்டம் வழங்கவுள்ளது.

அரச அதிகாரி ஒருவர் தனது ஓய்வூதியத்தை எவ்வித தாமதமும் இன்றிப் பெறுவது அவரது உரிமையாகும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஓய்வுபெறும் அரச அதிகாரிகள், தமது ஓய்வுக்கால வாழ்க்கையை எவ்வித சிக்கலுமின்றி ஆரம்பிக்க இந்த முயற்சி கைகொடுக்கும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now