New Updates! Fresh news just arrived.

குழந்தைகளுக்கான பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சுற்றிவளை...

News

குழந்தைகளுக்கான பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு!

September 27, 2026 5:14 pm
குழந்தைகளுக்கான பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு!
குடிக்கக்கூடிய திரவங்களை எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பொலிமர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் ஊட்டும் போத்தல்கள் தொடர்பில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கடந்த வாரம் நாடளாவிய விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்நடவடிக்கையின் கீழ் மொத்தம் 144 சுற்றிவளைப்புகள்/பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவற்றில் SLS 1616 தரநிலையுடன் தொடர்புடைய மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் தொடர்பில் 96 பரிசோதனைகளும், SLS 1306 தரநிலையுடன் தொடர்புடைய பொலிமர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் ஊட்டும் போத்தல்கள் தொடர்பில் 48 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பரிசோதனைகளின்போது 1,400க்கும் மேற்பட்ட பொருட்களினை வழக்குப் பொருட்களாக அதிகாரிகளினுடைய பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.

2025.10.01 திகதி இடப்பட்ட 2456/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 96, குறித்த பொருட்கள் தொடர்பான தேவைகளினை நிர்ணயிக்கின்றது.

இக்கட்டளை 2026 ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வந்துள்ளது. குடிக்கக்கூடிய திரவங்களை எடுத்துச் செல்வதற்கான மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்களுக்கு SLS 1616 தரநிலையும், பொலிமர் பொருட்களால் தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால் ஊட்டும் போத்தல்களுக்கு SLS 1306 தரநிலையும் பொருந்துகின்றன.

உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு SLS சான்றிதழ் குறியீடு கட்டாயமாகும். உள்நாட்டில் தயாரிக்கப்படும் மேற்குறிப்பிட்ட பொருட்கள் இலங்கை தரநிலைகள் நிறுவகத்தினால் (SLSI) வழங்கப்படும் SLS Product Certification Mark-ஐ கொண்டிருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு உள்நாட்டு தயாரிப்பு “தரநிலைக்கு இணங்குகின்றது” என குறிப்பிடுவது மட்டும் போதுமானதல்ல, கட்டளை இலக்கம் 96 இன் கீழ் SLS Product Certification Mark இருப்பதுவும் கட்டாயமாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு SLS குறியீடு இருப்பது மட்டுமே சட்டத் தேவை அல்ல. இறக்குமதி செய்யப்பட்ட மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் ஊட்டும் போத்தல்களில் SLS குறியீடு கட்டாயமாக இருக்க வேண்டும் என்று கட்டளை இலக்கம் 96 குறிப்பிடவில்லை.

இதற்குப் பதிலாக, அவ்வாறான இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களினை இலங்கை தரநிலைகள் நிறுவகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் Import Inspection Scheme இன் கீழ் பரிசோதிக்கப்பட்டதற்கு பின்னர் விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தேவையான சந்தர்ப்பங்களில் கட்டளை இலக்கம் 83 இன் கீழ் பற்றுச்சீட்டுகள், invoices மற்றும் விநியோகத் தகவல்கள் பரிசோதிக்கப்பட்டு பொருட்களின் மூலத்தை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மீளப் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகளுக்கான பால் ஊட்டும் போத்தல்களினை வாங்கும்போது தயாரிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களினை கவனமாகப் பரிசோதிக்கவும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களினை வாங்கும்போது SLS Product Certification Mark உள்ளதா என்பதினையும் கவனிக்கவும்.

இறக்குமதி செய்யப்பட்ட பொருளில் SLS குறியீடு இல்லாதது மட்டும் அந்தப் பொருள் சட்டவிரோதமானது என்று முடிவு செய்வதற்கான காரணமல்ல. பொருட்களினை வாங்கும்போது பற்று அல்லது விற்பனைச் சீட்டினைப் பெற்றுப் பாதுகாப்பாக வைத்திருக்கவும்.

குறித்த பொருட்களினை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சட்ட மற்றும் தரநிலைத் தேவைகளினை உறுதிப்படுத்திக்கொள்ளவும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு SLS Product Certification Mark தொடர்பிலும் தேவையினை உறுதிப்படுத்த வேண்டும்.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள பொருட்கள் SLSI Import Inspection Scheme இன் கீழ் பரிசோதிக்கப்பட்டு விற்பனைக்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதினை உறுதிப்படுத்தும் ஆவணங்களினையும் சரிபார்க்க வேண்டும்.

மேலும் கொள்வனவு மற்றும் விநியோகம் தொடர்பான பற்றுச்சீட்டுகள், invoices மற்றும் வழங்குநர் தகவல்களை முறையாகப் பேணவும்.

மேலதிக தகவல்களுக்கு அல்லது சட்டத் தேவைகளுக்கு இணங்காததாக சந்தேகிக்கப்படும் பொருட்கள் தொடர்பான தகவல்களை வழங்க அலுவலக நேரங்களில் 1977 குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளுமாறு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now