New Updates! Fresh news just arrived.

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து

News

கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து

August 16, 2026 8:41 am
கடுவெல பகுதியில் இன்று விசேட போக்குவரத்து
சித்த ரன்கடு பத்தினி தேவாலயத்தின் வருடாந்த தீர்த்த உற்சவ பெரஹெரா நடைபெறவுள்ளதை முன்னிட்டு, கடுவெல மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (16) விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேவாலயத்தின் பெரஹெரா இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இடம்பெறவுள்ளது.

தேவாலயத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகும் ஊர்வலம், 143 அவிசாவளை–கொழும்பு பிரதான பேருந்து வீதி ஊடாக கடுவெல ராஜசிங்க பாலத்தை கடந்து பண்டாரவத்தை மற்றும் பியகம பகுதிகளை சென்றடையும்.

தீர்த்த உற்சவ நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர், அதே பாதையூடாக மீண்டும் கடுவெல சந்தியை கடந்து தேவாலயத்தை நோக்கி பெரஹெரா செல்லவுள்ளது.

இதனால் குறித்த நேரத்தில் அப்பகுதிகளில் வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாற்றுப் பாதை:
143 அவிசாவளை–கொழும்பு பேருந்து வீதியில் வெலே சந்திப் பகுதியில் போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், 697 பேருந்து வீதியிலிருந்து பட்டியவத்தை வீதியைப் பயன்படுத்தி 177 கடுவெல–கொள்ளுப்பிட்டி பேருந்து வீதியை சென்றடையலாம்.

அங்கிருந்து மாலபே திசையில் செல்லும் ராஜசிங்க மாவத்தை வழியாக மீண்டும் 143 அவிசாவளை–கொழும்பு பேருந்து வீதியை அடைந்து பயணிக்க முடியும்.

பெரஹெரா நடைபெறும் நேரத்தில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்க, பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now