New Updates! Fresh news just arrived.

சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற விசேட...

News

சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற விசேட செயலமர்வு!

January 25, 2026 8:25 pm
சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கு இடம்பெற்ற விசேட செயலமர்வு!
எதிர்வரும் 17/2/2026 ஆரம்பமாகவுள்ள சாதாரண தரப்பரீட்சை எழுத உள்ள மாணவர்களிற்கான தமிழ் மற்றும் கணித பாடத்திற்கான விசேட செயலமர்வுகள் சிகரம் நிறுவனத்தின் அனுசரணையுடன் செம்பியன்பற்றுத் தெற்கு வேலுப்பிள்ளை செல்லம்மா இலவசக் கல்வி நிலையத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது

இச் செயலமர்வில் கணித பாட விரிவுரையாளராக ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மென்பொருளியலாளர் பட்டத்தை முடித்த வினித் அவர்களும் தமிழ்ப்பாட வளவாளராக சிகரம் கல்வி நிறுவனத்தின் இணைப்பாளரும் தமிழ் ஆசிரியருமான கு.உதயபாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்

இவ் விசேட செயலமர்வில் மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்றனர் மற்றும் பரீட்சை இடம்பெறுவதற்கு முன் சிகரம் கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணம் முழுவதும் பிரிசித்தி பெற்ற ஆசிரியர்களை கொண்டு பல விசேட செயலமர்வுகள் இடம்பெற உள்ளது.

பூ.லின்ரன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now