வடமராட்சி கிழக்கு சமாசத்தில் இடம் பெற்ற விசேட செயலமர்வு! ...
News
வடமராட்சி கிழக்கு சமாசத்தில் இடம் பெற்ற விசேட செயலமர்வு!
யாழ் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் நேற்றைய தினம் காலை 10:30 மணி அளவில் விசேட செயலமர்வு ஒன்று இடம்பெற்றது
குறித்த செயலமர்வில் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் சங்கங்களில் இருந்து தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் என மூவரும் கலந்து கொண்டனர்
மேற்படி கலந்துரையாடலில் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் சங்கங்களின் யாப்பு அதனைத் தொடர்ந்து சங்கங்களுக்கு உள்ளான அங்கீகாரங்கள் மற்றும் அதிகாரங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து சங்கங்கள் எதிர்நோக்கும் சட்ட அரசியல் பிரச்சினைகள் அத்தோடு அதனை கட்டுப்படுத்தும் வழிகள் என்பன தொடர்பாக போதியளவான விளக்கங்கள் விரிவுரையாளரால் வழங்கப்பட்டது
குறித்த செயலமர்வில் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் மற்றும் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையில் உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் மற்றும் விசேட விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
(பூ.லின்ரன் : வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்)