216 ரன்கள் இலக்குடன் களமிறங்குகிறது இலங்கை.
News

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (11) நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களைக் குவித்தது. இதனால் இலங்கை அணிக்கு 216 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் மாஸ் சதாகட் ஓட்டங்களைப் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.
இந்நிலையில் இலங்கை அணி 216 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடவுள்ளது.
இப்போட்டிக்கான இலங்கை அணியில் 3 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, சினேத் ஜெயவர்தன, சமிந்து விக்ரமசிங்க மற்றும் நுவன் துஷார ஆகிய வீரர்களுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, முதல் போட்டியில் களம் கண்ட கமில் மிஷார, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் இப்போட்டிக்கான அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பாகிஸ்தான் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரசௌல்லாவுக்குப் பதிலாக சல்மான் மிர்சா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.