New Updates! Fresh news just arrived.

இந்தியாவுக்கு எதிராக 290 ஓட்டங்களில் ஆட்டமிழந்த இலங்கை! -...

News

இந்தியாவுக்கு எதிராக 290 ஓட்டங்களில் ஆட்டமிழந்த இலங்கை!

August 26, 2026 11:05 am
இந்தியாவுக்கு எதிராக 290 ஓட்டங்களில் ஆட்டமிழந்த இலங்கை!
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்று வரும் இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 290 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சொனால் தினுஷ 103 ஓட்டங்களையும், பசிந்து சூரியபண்டார 80 ஓட்டங்களையும் பெற்றனர். தினுஷின் சிறப்பான ஆட்டம் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவியது.

இந்திய அணியின் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மனவ் சுதார் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதற்கு முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது. இதனால் இந்திய அணியை விட இலங்கை அணி 213 ஓட்டங்கள் பின்தங்கியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now