New Updates! Fresh news just arrived.

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நி...

News

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்!

April 29, 2026 6:44 pm
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமனம்!
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டினுடைய புதிய இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டிருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, புதிய இடைக்கால நிர்வாக குழுவினுடைய தலைவராக இரான் விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, துஷிர ரதல்ல, சிதத் வெட்டிமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாப்டர், உப்புல் குமாரப்பெரும, தினால் பிலிப்ஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினுடைய அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் இன்று (29) தொடக்கம் தற்காலிகமாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களுக்கு அமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரிக்கெட் விளையாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகளினைக் காண்பதற்கும், அதன் கட்டமைப்பில் மாற்றங்களினை மேற்கொள்வதற்குமாக குறித்த இடைக்கால நிர்வாகக் குழுவானது நியமிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினுடைய தலைவரான ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் இராஜினாமா செய்ததினைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now