New Updates! Fresh news just arrived.

IMF உடன் இலங்கை ஊழியர் மட்ட உடன்பாடு!

News

IMF உடன் இலங்கை ஊழியர் மட்ட உடன்பாடு!

October 5, 2026 9:42 am
IMF உடன் இலங்கை ஊழியர் மட்ட உடன்பாடு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழான 7ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, IMF ஊழியர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

IMF நிறைவேற்று சபையின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இலங்கைக்கு சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவுள்ளது.

எனினும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை உரிய அளவுருக்களுக்கு அமைவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.

தொடர்ச்சியான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை பொருளாதாரம் மீட்சியை வெளிப்படுத்தி வருவதாக IMF தெரிவித்துள்ளது. அதேவேளை, எரிசக்தி விலை, உலக வர்த்தக நிலைமை மற்றும் மத்திய கிழக்கு மோதல் உள்ளிட்ட காரணிகளால் பொருளாதாரத்துக்கு தொடர்ந்து ஆபத்துகள் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now