New Updates! Fresh news just arrived.

நாவிதன்வெளியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச மத்தி...

News

நாவிதன்வெளியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச மத்திய குழுக்கூட்டம்!

February 2, 2026 2:03 pm
நாவிதன்வெளியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச மத்திய குழுக்கூட்டம்!
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாவிதன்வெளி பிரதேச மத்திய குழுக்கூட்டம், நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் அல்ஹாஜ் நிசார் ஹாஜியார் அவர்களின் தலைமையில், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி. நவாஸ் அவர்களின் காரியாலயத்தில் இன்று நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதான அதிதியாக அம்பாறை மாவட்டதிதின் பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிணுடைய பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் கலந்து கொண்டதுடன், கட்சியினுடைய அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன் மற்றும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நவாஸ் ஆகியோரும் பங்கேற்றனர்.

மேலும், நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த கட்சிக் கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரம் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நாவிதன்வெளி பிரதேசத்திற்கான வருகை தொடர்பாகவும், நாவிதன்வெளி பிரதேசத்தில் அமைந்துள்ள 10 கிராம சேவகர் பிரிவுகளுக்கான இளைஞர் அமைப்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் மற்றும் பிரதேச ரீதியான கட்டமைப்பு வலுப்படுத்தல் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now