New Updates! Fresh news just arrived.

இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கம் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு ...

News

இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கம் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பு!

November 9, 2026 9:32 pm
இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கம் ஹிஸ்புல்லாஹ் எம்.பிக்கு நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பு!
இலங்கை முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கு பல்வேறு சவால்களை அமைச்சரின் கவனத்திற்கு அதற்கான தீர்வுகளை பெற்றுத்தந்தமைக்காக இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களை இன்று (09) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் சந்தித்து தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில், இலங்கை முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவரும், மாத்தளை மாவட்டம், கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்தவருமான திருமதி ரோஷினி கருணாரத்னே அவர்கள் உட்பட, மட்டக்களப்பு திருகோணமலை, மாத்தளை, அம்பாரை மற்றும் கண்டி மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்பள்ளி ஆசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக தான் தொடர்ச்சியாக குரல்கொடுத்துவருவதாகவும் எதிர்காலத்தில் குரல்கொடுக்க தயாராக இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now