இலங்கையை உலுக்கிய சிறை கலவரம்: வெளியான அதிர்ச்சி தகவல் - ...
News
இலங்கையை உலுக்கிய சிறை கலவரம்: வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குழுவொன்றுக்கும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் குழுவொன்றுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில், இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறைச்சாலை அதிகாரிகளை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது, அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் நிலைமைகள் தொடர்பில் வைத்தியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவம், 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலை கலவரம் சம்பவத்திற்குப் பின்னர் நாட்டின் சிறைச்சாலை வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவங்களில் ஒன்றாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.