New Updates! Fresh news just arrived.

மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் ...

News

மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 18, 2026 9:10 am
மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று (18) நடைபெற்ற மூன்றாவது காலிறுதிப் போட்டியில் மலேசிய அணியை எதிர்கொண்ட இலங்கை, முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

161 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மலேசிய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 74 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இதன்மூலம் இலங்கை மகளிர் அணி 86 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now