அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்!
News

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பினை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனினுடைய சுகநலன்களினை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்ககுறிய இலங்கைத் தூதுவரான ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டிருக்கும் தமாமில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார்.
ரியாத் தலைநகரில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் குறித்த சிறைச்சாலைக்குச் சென்றிருந்த தூதுவர், அனோஜன் சிவராசாவினை சந்தித்து அவரது தற்போதைய நிலைமை மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பிலும் கேட்டறிந்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது தூதுவர், அனோஜனோடு விரிவாகக் கலந்துரையாடியதாக அந்நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அவரது தேவைகள் மற்றும் தற்போது அவர் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், அனோஜனுக்குத் தேவையாகவுள்ள அனைத்து தூதரக (Consular) மற்றும் சட்ட உதவிகளினையும் வழங்குவதற்குத் தூதரகம் கடமைப்பட்டிருப்பதாகவும் தூதுவர் இதன்போது மீண்டும் ஒருமுறை உறுதி அளித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் நேரடித் தொடர்பாடல்களினை இலகுபடுத்தும் வகையில், தூதுவரினை தனிப்பட்ட ரீதியில் தொடர்புகொள்வதற்கான தகவல்களும் அனோஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பைத் தொடர்ந்து அனோஜன் சிவராசா நல்ல உடல்நலத்தோடு, இருப்பதாகவும், சவூதி சிறை அதிகாரிகளினால் அவரது நலன்புரி விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைத் தூதுவர் குறித்த விஜயத்தின் போது தமாம் மத்திய சிறைச்சாலையினுடைய பணிப்பாளர் மற்றும் சிறைச்சாலை வைத்திருடனும் கருத்துக்களினை பரிமாறிக் கொண்டார்.