இஸ்ரேலில் பணியாற்றிவரும் இலங்கை பெண் காயம்!
News

இஸ்ரேலில் நிலவி வருகின்ற போர்ச் சூழலில் அங்கு பணியாற்றி வரும் இலங்கை பெண் ஒருவர் வான்வழித் தாக்குதலினால் காயமடைந்திருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.
வடக்கு இஸ்ரேல் பகுதியில் பராமரிப்பாளராக பணியாற்றி வருகின்ற கடவத்தை பகுதியினைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இதன்படி, தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள அவர், உடனடியாக மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், தேவையான மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் அவர் தற்போது வீடு திரும்பியுள்ளதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.