New Updates! Fresh news just arrived.

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் சரிவு!

News

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் சரிவு!

August 23, 2026 8:50 am
இலங்கையின் சுற்றுலா வருமானத்தில்  சரிவு!
இலங்கையின் சுற்றுலாத் துறையில் இருந்து கிடைக்கும் வருமானம் இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி முதல் ஜூலை வரையான காலப்பகுதியில் சுற்றுலா மூலம் 1,796.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பெறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்தத் தொகை 2,031.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாகஇருந்தது.

இதன்படி, வருடாந்த ஒப்பீட்டில் சுற்றுலா வருமானத்தில் 11.5% வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

குறிப்பாக, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுற்றுலா வருமானம் 318.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அது 285.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.

இதற்கு மாறாக, வெளிநாட்டுப் பணப்பரிமாற்ற வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றங்கள் மூலம் 8,382.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் இந்த வருமானம் 4,435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

மேலும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 697.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், இந்த ஆண்டு அதே மாதத்தில் 777.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் காட்டுகின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now