New Updates! Fresh news just arrived.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர எச்சரிக்கை

News

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர எச்சரிக்கை

October 19, 2026 10:47 am
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அவசர எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

விமானச் சேவையின் பெயரில் இயங்கும் போலியான நடமாடும் செயலிகள் (Mobile Apps) மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் இடம்பெறக்கூடிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, வட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் மற்றும் செய்திகளில் உள்ள இணைப்புகள் (Links) மூலம் கொடுப்பனவுகளைச் செய்வதைத் தவிர்க்குமாறு அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி அட்டைப் இலக்கங்கள் (PIN) மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிகாரபூர்வ கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற முறையான தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது அல்லது வேறு பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு மாத்திரம் செல்வதுடன், உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவை வழிகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now