பெப்ரவரி மாதம் 02 தொடக்கம் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள...
News
பெப்ரவரி மாதம் 02 தொடக்கம் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வருகின்ற தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளினை முன்வைத்து, கடந்த ஜனவரி 26 ஆம் திகதி தொடக்கம் நாடு முழுவதிலுமுள்ள வைத்தியசாலைகளினை உள்ளடக்கிய வகையில் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது கூடிய சங்கத்தினுடைய மத்திய செயற்குழு, தமது பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை முன்வைக்க சுகாதார அமைச்சருக்கு 48 மணிநேர கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில், சுகாதார அமைச்சு உரிய தீர்வுகளினை வழங்கத் தவறியுள்ளதால், போராட்டத்தினை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அவசர செயற்குழு கூட்டமானது இன்று (31) காலை நடைபெற்றது.
இதன்படி, பெப்ரவரி மாதம் 02 காலை 8.00 மணி தொடக்கம் நடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்:
வைத்தியசாலையில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களினை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்கு பரிந்துரைத்து மருந்துச் சீட்டுகளினை வழங்குவது நிறுத்தப்படும்.
வைத்தியசாலையில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு பரிந்துரைப்பதை நிறுத்துதல்.
அரசியல் குழுக்களினால் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார முகாம்கள் மற்றும் கிளினிக்குகளில் வைத்தியர்கள் தன்னார்வமாக கலந்துகொள்வதில் இருந்து விலகுவர்.
போதிய வைத்தியர்கள் இல்லாத நிலையில், வைத்தியசாலைகளில் புதிதாக திறக்கப்படும் வார்டுகள் அல்லது பிரிவுகளுக்கு வைத்தியர்களினை இணைப்பது நிறுத்தப்படும்.
நோயாளிகளினுடைய பாதுகாப்பு, தனிப்பட்ட இரகசியத்தன்மை மற்றும் போதுமான ஊழியர் வசதிகள் இல்லாத சூழலில் நோயாளிகளினை பரிசோதிப்பதில் இருந்து வைத்தியர்கள் விலகுவர்.
விசேட வைத்திய நிபுணர்கள் தாம் நியமிக்கப்பட்ட வைத்தியசாலையில் மட்டுமே சேவையாற்றுவர் மற்றும் விசேட நிபுணர்கள் இல்லாத பிற வைத்தியசாலைகளுக்குச் சென்று மேலதிக கடமைகளினை ஆற்றுவதில் இருந்து அவர்கள் விலகிக்கொள்வர்.
இவ்வாறான கடும் நடவடிக்கைகளினை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் முன்னெடுக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.