கல் ஓயா இடஒதுக்கீடு விவகாரம்: அம்பாறை ஒருங்கிணைப்புக் குழ...
News
கல் ஓயா இடஒதுக்கீடு விவகாரம்: அம்பாறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சலசலப்பு!
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இன்று (28) கல் ஓயா இடஒதுக்கீடு (Gal Oya Reservation) தொடர்பிலான பிரச்சினை முன்வைக்கப்பட்டதினைத் தொடர்ந்து, கூட்டத்தில் பெரும் தர்க்கமும் சலசலப்பும் ஏற்பட்டது.
பிரதேசத்தினுடைய முக்கிய நீர்ப்பாசன மற்றும் காணிப் பயன்பாடு தொடர்பான குறித்த விவாதத்தின் போது, மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே காரசாரமான கருத்துப் பரிமாற்றங்களானது இடம்பெற்றன.
அதிகாரிகள் மத்தியிலும் எழுந்த அதிருப்தி
இதன்படி, கலந்துரையாடலின் போது கீழ்நிலை நிர்வாகப் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் இடைமறித்துப் பேசத் தொடங்கியதினைத் தொடர்ந்து, மண்டபத்தில் காரசாரமான சூழலானது நிலவியது.
குறிப்பாக, கல் ஓயா திட்டத்தின் எல்லைகள் மற்றும் நீர் விநியோக நிர்வாகம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளால் அம்பாறை நீர்ப்பாசனப் பணிப்பாளரும் (Irrigation Director) கோபமடைந்தார். கீழ்நிலை அதிகாரிகளினுடைய தொடர்ச்சியான தலையீடுகள் விவாதத்தின் தீவிரத்தினை மேலும் அதிகரித்தன.
ஆளுநரின் கண்டிப்பான தலையீடு
நிலைமை கைமீறிச் செல்வதினை அவதானித்த கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் லால் ரத்னசிறி, உடனடியாகக் குறுக்கிட்டுத் தனது பலத்த அதிருப்தியினையும் கோபத்தினையும் வெளிப்படுத்தினார்.
"கூட்டத்தின் ஒழுங்கையும் கண்ணியத்தினையும் அனைவரும் பேண வேண்டும். முறையான நடைமுறைகளினைப் பின்பற்றாமல் தன்னிச்சையாகக் கூச்சலிடுவதை ஏற்க முடியாது." என தெரிவித்தார்.
ஆளுநர் எச்சரிக்கை
ஆளுநரின் கண்டிப்பான தலையீட்டினைத் தொடர்ந்து மண்டபத்தில் அமைதி திரும்பியதோடு, கல் ஓயா இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் நியாயமான தீர்மானங்களினை எடுப்பது குறித்து மேலதிக ஆராய்வுகள் தொடர்ந்தன.
பாறுக் ஷிஹான்