பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கண்டிப...
News
பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு பிறப்பித்துள்ள கண்டிப்பான உத்தரவு
நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க, கல்வி அமைச்சினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டல்களை உடனடியாகவும் முறையாகவும் நடைமுறைப்படுத்துமாறு பாடசாலை அதிபர்களுக்குக் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில பாடசாலைகளில் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை என அமைச்சிற்குப் பல புகார்கள் கிடைத்துள்ளதாகக் பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாடசாலை நேரங்களில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கும் நோக்கிலேயே இந்த வழிகாட்டல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பிற்கு அதிபர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஏதேனும் அலட்சியம் காட்டப்பட்டால், அது மாணவர்களைப் பாரிய ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, அனைத்து பாடசாலைகளும் உரிய சுகாதார நடைமுறைகளைத் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.