New Updates! Fresh news just arrived.

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!

News

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!

January 22, 2026 12:11 pm
தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு!
முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படுகின்ற இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினுடைய வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கமானது தெரிவித்துள்ளது.

இன்று காலை 8.00 மணி தொடக்கம் இந்த பணிப்புறக்கணிப்பினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளரான வைத்தியர் சமில் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு குறித்தும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், வைத்தியர்களினுடைய கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளினை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை (23) தொடக்கம் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்ட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now