New Updates! Fresh news just arrived.

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி நெடுந்தீவில் போராட்டம...

News

பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி நெடுந்தீவில் போராட்டம்!

April 24, 2026 8:29 pm
பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி நெடுந்தீவில் போராட்டம்!
தீவகம் - நெடுந்தீவில் கடந்த 30 வருடத்திற்குமேலாக தீர்க்கப்படாத மக்களினுடைய அடிப்படை பிரச்சனை தொடர்பில் கவனயீர்புப் போராட்டம் ஒன்று இன்று (24) மகாவலித்துறையில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த பல தசாப்த காலமாக நெடுந்தீவில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை மற்றும் சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைத் தேவைகளானது பூர்த்தி செய்யப்படாத நிலையில் மக்கள் பல இன்னல்களினை அனுபவித்த வருகின்றனர்.

மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களானது வரலாற்று பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகக் காணப்படுகின்ற நெடுந்தீவில் மக்களினுடைய அடிப்படை தேவைகளினை பூர்த்தி செய்வதாக குறிப்பிட்டு வரும் போதிலும் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கைகளினையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை.

குறிப்பாக தற்போது கடற்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற நெடுந்தாரகை படகில் நூறு பேரை மாத்திரமே ஏற்றிச்செல்லும் நிலை காணப்படுகின்றது.

அதிலும் 80 பேர் அரச உத்தியோகத்தர்களாக இருப்பதினால் பொதுமக்கள் இருபது பேரை மாத்திரமே ஏற்றச் செல்லமுடிகின்றது. இதன் காரணமாக நேயமற்ற மற்றும் அவசர தேவை கொண்ட பொதுமக்கள் பயணிக்க முடியாமல் புறக்கணிக்கப்படுகின்ற நிலை தொடர்ந்து காணப்படுகின்றது.

இதன் காரணமாக மக்களின் அடிப்படை தேவைகளினை வலியுறுத்தி கறுப்பு கொடிகளைத் தாங்கியவாறு மகாவலி இறங்குதுறையில் இருந்து நெடுந்தீவு பிரதேச செயலகம் வரைக்கும் மக்கள் பேரணியாக சென்று பிரதேச செயலரிடம் ஜனாதிபதி, ஆளுநர், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மனுக்களினை கையளித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்ததோடு, அவரிடமும் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now