உருவாகப் போகும் கடுமையான சட்டங்கள்: அரசாங்கத்தின் தீர்மான...
News
உருவாகப் போகும் கடுமையான சட்டங்கள்: அரசாங்கத்தின் தீர்மானம்
உள்நாட்டு உற்பத்திகளைப் பாதுகாக்கும் நோக்கில், குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்திலுள்ள நாலந்தா மற்றும் களுதேவல தொழிற்பேட்டைகளுக்கு மேற்கொண்ட விசேட கள விஜயத்தின் போதே அமைச்சர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலையை விட, இறக்குமதி செய்யப்படும் அதே பொருட்களின் விலை குறைவாக இருந்தால், அது குறித்து உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு உற்பத்தியாளர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பாதணிகள், டைல்ஸ், லைட்டர்கள் மற்றும் தீப்பெட்டிகள் போன்றவை விதிக்கப்பட்ட வரிகளை விடக் குறைவான விலையில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான முறைகேடுகள் குறித்து முறையாக ஆராய்ந்து முறைப்பாடு செய்வது உற்பத்தியாளர்களின் பொறுப்பாகும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை அரசாங்கத்தால் மாத்திரம் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது எனவும், உற்பத்தியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி இதன்போது சுட்டிக்காட்டினார்.