New Updates! Fresh news just arrived.

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள...

News

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

November 4, 2026 4:50 pm
பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (04) முற்பகல் 11.51 மணிக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அறிவித்தல், நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும்.

இதற்கமைய, 22 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

அதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் அனுராதபுரம், அம்பாறை, களுத்துறை, கேகாலை, கிளிநொச்சி, குருணாகல், கொழும்பு, கம்பஹா, காலி, நுவரெலியா, புத்தளம், பொலன்னறுவை, பதுளை, மன்னார், கண்டி, மாத்தளை, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக மொணராகலை, இரத்தினபுரி, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த அறிவித்தல் செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now