New Updates! Fresh news just arrived.

ஈரான் போருக்கான நிதிக்கு கடும் எதிர்ப்பு: அமெரிக்க செனட் ...

News

ஈரான் போருக்கான நிதிக்கு கடும் எதிர்ப்பு: அமெரிக்க செனட் உறுப்பினர்!

March 19, 2026 9:20 am
ஈரான் போருக்கான நிதிக்கு கடும் எதிர்ப்பு: அமெரிக்க செனட் உறுப்பினர்!
ஈரானுக்கு எதிரான போருக்காக பெரும் நிதி ஒதுக்கத் திட்டமிடப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன்கிறிஸ் வான் ஹோலன், கடும் எதிர்ப்புபை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் வெளியிட்ட தகவலின்படி, ஈரான் போருக்காக 200 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் நிதி கோருவதற்கு பென்டகன் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இதற்கு பதிலளித்த அவர், தனது எக்ஸ் (X) பதிவில்,
“அமெரிக்க மக்களுக்கு தேவையில்லாத, மேலும் நாட்டை பாதுகாப்பாக மாற்றாத ஒரு போருக்காக 200 பில்லியன் டொலர் செலவிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் போரைக் கட்டுப்படுத்துவதற்கும், படைவீரர்களை பாதுகாப்பதற்கும், பொதுமக்களின் உயிர்களை காப்பதற்கும், சட்டவிரோதமான நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதற்கும் சிறந்த வழி நிதியை நிறுத்துவதே” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, இந்த நிதி கோரிக்கையை காங்கிரஸில் இறுதியாக எவ்வளவு தொகையாக சமர்ப்பிக்கப்படும் என்பது இன்னும் தெளிவாக இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now