மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: மீனவர்களுக்கு வி...
News
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று: மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
மாத்தறையில் இருந்து பொத்துவில் வரையிலும், சிலாபத்தில் ருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரையிலும் உள்ள கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதினை தவிர்க்குமாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது அறிவுறுத்தியுள்ளது.
ஏனைய பகுதிகளில் இருந்து புறப்படும் படகுகள் குறித்த ஆபத்தான கடற்பரப்புகளுக்குள் நுழைய வேண்டாம் எனவும் அறிக்கையொன்றினை வெளியிட்டு அந்த அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளானது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) அறிவித்துள்ளதுதுடன், இதற்கமைய, மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், சிலாபத்தில் இருந்து கற்பிட்டி ஊடாக மன்னார் வரைக்குமான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரைக்கும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதிகளின் கடல் கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படக்கூடும் என்பதினால், கரையோர மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பகுதிகள் மிகவும் ஆபத்தானவை என்றும் அதில் சுட்டிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வரவிருக்கும் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்ப்பில் தீவிர அவதானம் செலுத்தி, பாதுகாப்பு அறிவுறுத்தல்ககளினை சரியாகப் பின்பற்றுமாறு அனைத்து மீனவ சமூகத்தினரிடமும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சானது கோரிக்கை விடுத்துள்ளது.