New Updates! Fresh news just arrived.

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

News

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

March 22, 2026 12:50 pm
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!
யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

போக்குவரத்து சிரமங்கள், பொதுமக்களின் அன்றாட வாழ்வில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து, உடனடி தீர்வு கோரியே இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தியவாறு "வேண்டும் வேண்டும் வீதி வேண்டும், இலகுவான போக்குவரத்தை உறுதி செய், மக்களுக்கு பாதுகாப்பான பாதை வேண்டும், எரிபொருள் பிரச்சினையான நேரம் பாதையை மூடாதே" என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now