அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம்...
News
அல்-ஹிலால் வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு!
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் உதவி வகுப்புத் தலைவர்களுக்கான “மாணவத் தலைவர்கள் மற்றும் வகுப்புத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா – 2026” பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் கே.எல்.அப்துல் ஜௌபர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். மேலும், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அஸ்மா ஏ. மலிக், தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ. ஹமீர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் பொறியியலாளர் எம்.சி.கே.நிஷாத் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
அத்துடன், 38ஆவது தேசிய மாணவர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கே.எம்.தமீம், சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.சி.இந்திக, அதிபர்களான எம்.எஸ்.எம்.பைஷால், ஏ.பி.ஷெரோன் டில்ராஸ், பிரதி அதிபர் எஸ்.எம்.உவைஸ் உள்ளிட்ட பல்வேறு துறைசார் முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பணிகளுக்குப் பொறுப்பான ஆசிரியர் மேஜர் முஹம்மட் ஷிப்லி ஷம்சுதீன் நிகழ்வின் ஒழுங்கமைப்பாளராக செயற்பட்டு, நிகழ்வை சிறப்பாக நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் புதிதாக நியமிக்கப்பட்ட மாணவ தலைவர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், மாணவர் தலைவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இதன்போது மாணவர் தலைவர்கள் தமது பொறுப்பு, ஒழுக்கம் மற்றும் சேவை தொடர்பான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டனர்.
மேலும் பாடசாலையின் கல்வி மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை ஒழுக்கக் கட்டுப்பாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஒழுக்காற்றுக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள், கல்வி ஆர்வலர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நூருல் ஹுதா உமர்