New Updates! Fresh news just arrived.

மாணவிகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய மாணவான்...

News

மாணவிகள் தொடர்பில் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய மாணவான்: 14 நாள் சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்க உத்தரவு!

March 18, 2026 9:18 am
மாணவிகள் தொடர்பில்  சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பிய மாணவான்: 14 நாள் சிறுவர் காப்பகத்தில் தடுத்துவைக்க உத்தரவு!
சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகள் தொடர்பில் அவதூறு செய்தபரப்பிய பாடசாலை மாணவன் ஒருவருக்கு 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை காப்பகத்தில் தடுத்துவைப்பதற்கு ஊர்காவற்றுறை நிதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குறித்த அவதூறு பரப்பியதினை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின்னுடைய உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் வெட்டிக் காயப்படுத்திய குற்றத்துக்காகவும் குறித்த மாணவனின் தந்தையாரையும் 14 நாள்கள் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவன் ஒருவர் மாணவி ஒருவரது புகைப்படம் மற்றும் இன்னொரு மணவியினுடைய தாயாரது தொலைபேசி இலக்கத்தினையும் "டிக்டொக்" சமூக ஊடகத்தில் கீழ்த்தரமான பாலியல் ரீதியான வாசகங்களுடன் பதிவிட்டு அவதூறு பரப்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த அவதூறினால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரினுடைய வீடிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவிய நிலையில் அவதூறு பரப்பிய மாணவனினுடைய தந்தையார் நியாயம் கேட்கச் சென்ற குறித்த நபரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியதால் குறித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிசில் இரு மாணவிகளினுடைய பொற்றோரும் முறைப்பாடு செய்திருந்த நிலையில் குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணையினை முன்னெடுத்த பொலிசார் இருவரையும் நேற்றையதினம் (17) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இன்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனினுடைய தந்தைக்கும் 14 நாட் கள் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now