New Updates! Fresh news just arrived.

மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்காக மாணவனின் புதி...

News

மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்காக மாணவனின் புதிய கண்டுபிடுப்பு

November 16, 2026 10:08 pm
மது போதையில் வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்காக மாணவனின் புதிய கண்டுபிடுப்பு
உயர் தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவனான எஸ் தினிப்ஷான், சாரதிகள் மது போதையில் வாகனம் செலுத்துவதை தடுப்பதற்காக புதிய NEXA தொழிநுட்பத்தினை கண்டுபிடித்துள்ளார்.

பதுள்ளை பாரதி மகா வித்தியாலயத்தில் தரம் 13 இல் வர்த்தக பிரிவில் கல்வி பயிலும் குறித்த மாணவன் 2026 ஆம் வருடத்திற்கான வணிக மற்றும் முயற்சியாண்மை திறன் மதிப்பீட்டு போட்டியில் இந்த புதிய கண்டுபிடிப்பை முன்வைத்துள்ளார்.

NEXA எனும் அதி நவீன Smart Alcohol Detection and Vehicle Safety System வீதி விபத்துக்களைக் குறைக்கவும், சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது.

ESP32 அல்லது ESP8266 மைக்ரோகண்ட்ரோலர் அத்தோடு Alcohol Sensor மூலம் இயங்கும் இந்த அமைப்பு, சாரதியின் சுவாசத்தில் உள்ள மதுசாரத்தின் அளவைக் கண்டறிந்து தகவல்களை Android செயலிக்கு அனுப்புகிறது.

இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக உருவாக்கப்பட்டுள்ளது, Android Software, இதன் மூலம் மதுசாரத்தின் அளவை நேரடியாகக் கண்காணிக்க முடியும்.

குறிப்பாக கண்டறியப்பட்ட மதுசாரத்தின் அளவை செயலியில் காண்பிப்பதோடு, ஆபத்தான அளவு கண்டறியப்படும்போது உடனடி எச்சரிக்கையையும் வழங்குகிறது.

மேலும், குறுந்தகவல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சாதாரண நிலை பச்சை நிறத்திலும், ஆபத்தான நிலை சிவப்பு நிறத்திலும் காட்டப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த போட்டியில் தேசிய மட்டத்தில் எஸ் தினிப்ஷான் மூன்றாம் இடத்தை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now