New Updates! Fresh news just arrived.

மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிகியுள்ள சாய்ந்தம...

News

மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிகியுள்ள சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் மாணவர்கள்!

May 22, 2026 3:46 pm
மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்குத் தெரிகியுள்ள சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தின் மாணவர்கள்!
2026 ஆம் ஆண்டுக்கான கல்முனை வலய மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சிறப்பான திறமையினை வெளிப்படுத்திய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தின் மாணவர்கள் மாகாண மட்டத்தின் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

குறித்த போட்டியில் இடம்பெற்ற முக்கியமான இரண்டு போட்டிகளில் முதலாம் இடத்தினை பெற்றதன் மூலம், பாடசாலைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் குறித்த சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.

மாணவர்களினுடைய வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ச்சியான பயிற்சிகளினை வழங்கிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரான என்.எம்.எ. ஆபாக் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் பாராட்டுகளினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, குறித்த வெற்றிக்கு உறுதுணையாகவிருந்த அதிபர், பிரதியதிபர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்களினுடைய பங்களிப்பும் பாராட்டப்பட்டுள்ளது.

மாகாண மட்டப் போட்டியிலும் மாணவர்கள் சிறப்பான பெறுபேறுகளினைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்ப்பார்கள் என்னுடைய நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now